சிரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்தை குறி வைத்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் டமாஸ்கஸின் மையப்பகுதியில் உள்ள பாலத்தை ராணுவ பேருந்து கடந்த போது இரண்டு குண்டுகள் ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டன. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவ வீரர்கள் வெடிக்காத மற்றொரு குண்டை செயலிழக்கச் செய்தனர். அதிபர் அஸாத், ரஷ்ய உதவியுடன் சிரியாவில் பதுங்கியிருந்த போராளி குழுக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதை தொடர்ந்து டமாஸ்கஸில் வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.