சீனாவில் குற்றச்செயல்கள் மற்றும் மோசமான செயல்பாடுகளில் ஈடுபடும் சிறுவர்களின் பெற்றோரை தண்டிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப கல்வி ஊக்குவிப்பு சட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட உள்ள அந்த சட்டத்தின் படி, தேசம், மக்கள் மற்றும் சமூகவுடைமை போன்றவற்றை சிறுவர்கள் நேசிக்கும் வகையில் பெற்றோர்கள் அவர்களுக்கு போதனைகள் வழங்க அறிவுறுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.
மேலும், இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரம் செலவிடுவது கட்டாயமாக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சிறார்கள் வார இறுதி நாட்களில் 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் கேம்கள் விளையாட வேண்டும் என சீன அரசு கட்டுப்பாடுகள் விதித்தது குறிப்பிடத்தக்கது.