கிரீஸ், சைப்ரஸ், துருக்கி, எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள கிரீஸ் நாட்டிற்குச் சொந்தமான தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 38 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 என பதிவானது.
சுமார் 30 வினாடிகள் உணரப்பட்ட நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை. மேலும், சைப்ரஸ் தலைநகர் நிகோசியா (Nicosia), லெபனான் தலைநகர் பெய்ரூட் (Beirut), எகிப்து தலைநகர் கெய்ரோ, துருக்கியின் அண்டால்யா (Antalya) மாகாணம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.