இஸ்ரேல் அருகே மத்தியதரைக்கடல் பகுதியில் 900 ஆண்டுகள் பழமையான போர் வாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹைஃபா துறைமுகம் அருகே நீச்சலடிக்கச் சென்ற ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவர் கடல் படுக்கையில் புதைந்திருந்த மூனேகால் அடி நீள போர் வாளை கண்டெடுத்தார்.
900 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற புனிதப் போரின் போது இஸ்ரேல் மீது போர் தொடுக்க வந்த கிறிஸ்தவ படைத் தளபதி ஒருவருக்குச் சொந்தமான வாளாக இது இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சிற்பிகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களால் மூடப்பட்டுள்ள இந்த வாள் சுத்தம் செய்த பின் பொதுமக்கல் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.