ஈக்வடார் நாட்டின் அமேசான் காட்டு பகுதிகளில் கச்சா எண்ணெய் எடுக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து பூர்வகுடிகள் வழக்கு தொடுத்துள்ளனர்.
கடந்த மே மாதம் அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட குவிலெர்மோ லாஸோ (Guillermo Lasso), அந்நிய முதலீடுகள் மூலம் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்படும் என அரசாணை பிறப்பித்தார்.
அமேசான் காடுகள் அமைந்துள்ள பகுதிகளில் இந்த திட்டத்தை அனுமதித்தால், அங்கு வாழும் 22 பூர்வகுடி சமூகத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் திட்டத்தை கைவிட வேண்டுமென பூர்வகுடி சமூகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
2025-ஆம் ஆண்டுக்குள் எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்களாக உயர்த்த அதிபர் Lasso திட்டமிட்டுள்ளார்.