அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரான காலின் போவெல் கொரோனா பாதிப்புகளால் காலமானார்.
அவருக்கு வயது 84. அந்நாட்டின் முதல் கருப்பின அமைச்சராக அவர் இருந்தார். கோவிட் பாதிப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.
2001 முதல் 2005 வரை குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தலைமையிலான அரசில் அவர் வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்தார்.