உலகிலேயே அதிக நாட்கள் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் வெள்ளிக்கிழமை முதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
50 லட்சம் மக்கள் வசிக்கும் மெல்போர்னில் 9 மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அடுத்த வாரம், மெல்போர்னில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தை எட்ட உள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை முதல் உணவகங்கள், மதுக்கூடங்கள் மற்றும் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கும் தளர்த்தப்பட்டுள்ளது.