அமெரிக்காவில் தயாரிப்பாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஹாலிவுட்டில் பணியாற்றும் திரை தொழிலாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கோவிட் காரணமாக பெரிய திரை,சின்னத்திரை, ஓ.டி.டி உள்ளிட்ட அனைத்து தளங்களுக்குமான தயாரிப்பு பணிகள் ஸ்தம்பித்த நிலையில், இப்போது நிலைமை சீராகியுள்ளதால், தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து திரைத் துறை பணியாளர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
14 மணி நேரம் வரை தொடர் வேலை மற்றும் கூடுதல் வேலை பளுவால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள், வேலை நேரம் குறைப்பு, அதிக சம்பளம், பணியின் இடையே ஓய்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், அவற்றை தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.