ஸ்பெயினின் லா பல்மா தீவில் உள்ள கும்ப்ரே வியகா எரிமலை தொடர்ந்து 27 வது நாளாக தீக்குழம்பை கக்கியது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 6,700 பேர் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், மேலும் 300 பேர் உடனடியாக உடமைகளை எடுத்து கொண்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டனர்.
1480 ஏக்கர் நிலங்கள், ஒரு சிமென்ட் தொழிற்சாலை உள்பட 1,500 கட்டிடங்களை தீக்குழம்பு கபளீகரம் செய்தது.