பிரேசிலில் காட்டுத் தீயால் நாசமாகி வரும் அமேசான் காடுகளை பாதுகாக்க வலியுறுத்தி எரிந்து போன அக்காடுகளின் மரங்களிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைக்கொண்டு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.
சாவோ பாலோவின் மிக பெரிய கட்டடத்தின் சுவரில் ஸ்ட்ரீட் ஆர்ட் முறையில், பற்றி ஏரியும் வனத்தில், இறந்த விலங்குகள் மத்தியில் தீயணைப்பு வீரர் ஒருவர் நிற்பதை போன்ற ஓவியத்தை மண்டனோ என்னும் ஓவியக் கலைஞர் தீட்டியுள்ளார்.
பிரேசில் முழுக்க சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த மண்டனோ, பல வனப்பகுதிகளிலிருந்து எரிந்த மரங்களின் சாம்பலை சேகரித்து வந்து இந்த பிரம்மாண்ட ஓவியத்தை படைத்துள்ளார்.