பூடானும் சீனாவும் எல்லைச் சிக்கல் தொடர்பான பேச்சுக்களை விரைவுபடுத்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொண்டுள்ளதை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
சீனாவுக்கும் பூடானுக்கும் இடையான பன்னாட்டு எல்லையை வரையறுப்பதில் தகராறு உள்ளது. இதைத் தீர்ப்பதற்காக இருநாடுகளும் 1984ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை 24 சுற்றுப் பேச்சுக்கள் நடத்தியுள்ளன.
இந்நிலையில் தகராறைத் தீர்க்கப் பேச்சுக்களை விரைவுபடுத்துவது குறித்துப் பூடான் தலைநகரில் இரு நாடுகளும் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ளன. ஏற்கெனவே சீனாவுடன் எல்லைத் தகராறைக் கொண்டுள்ள இந்தியா, பூடானுடனான அதன் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.