பிரான்ஸ்சில் தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட நட்புமுறை கால்பந்து போட்டியில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்து கொண்டு விளையாடினார்.
பாரீஸ் மற்றும் பிரான்ஸ் மருத்துவமனை அறக்கட்டளை சார்பில் நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டும் விதமாக பாய்ஸி நகரில் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற அதிபர் மேக்ரான், பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இறுதியில் ஆட்டம் 1-க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.