கிரீன்லாந்தில் தோண்டியெடுக்கப்பட்ட அனார்தொஸைட் (anorthosite) என்னும் கனிமம், பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என அதை வெட்டி எடுக்கும் சுரங்க நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நாசாவின் அப்போலோ விண்கலம் நிலவிலிருந்து கொண்டு வந்த கனிமம் போல உள்ள anorthosite, பூமி உருவான ஆரம்ப காலக்கட்டத்தில் உருவானதாக புவியியலாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் இந்த கனிமத்திலிருந்து அலுமினியம் பிரித்தெடுக்க முடியுமென கூறியுள்ளனர்.
தற்போது நடைமுறையில் இருக்கும் பாக்ஸைட் (bauxite) கனிமத்திலிருந்து அலுமினியத்தை பிரித்தெடுக்க அதிகப்படியான ஆற்றல் தேவைப்படுகிறது.