ஜப்பானின் புதிய பிரதமர் பியூமியோ கிஷிடா நாடாளுமன்ற கீழவையை கலைத்துள்ளார். 11 நாட்களுக்கு முன்னர் யோஷிஹிடே சுகாவிடம் இருந்து பிரதமர் பதவியை ஏற்ற அவர், நாடாளுமன்ற கீழவையில் தமது கன்சர்வேடிவ் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு உள்ள பெரும்பான்மையை மீண்டும் உறுதி செய்யும் நோக்கில் அவையை கலைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்ற கீழவைக்கு வரும் 31 ஆம் தேதி தேர்தல் நடந்து புதிய நாடாளுமன்றம் அமையும். அதன் பின்னர் புதிய அரசை பிரதமர் பியூமியோ கிஷிடா ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு ஜப்பான் மக்களிடம் நல்ல செல்வாக்கு இருப்பது கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளதால், அவரது தலைமையில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரு வெற்றி பெறும் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த 2017 ல் ஷின்சோ அபே பிரதமராக இருந்த போது ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவைக்கு தேர்தல் நடந்தது.