அண்டார்க்டிகாவில் ஹம்பேக் திமிங்கலங்கள் விசித்திரமான முறையில் மற்ற மீன்களை வேட்டையாடுவது படமாக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தைச் சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் அண்டார்க்டிகாவில் ஆய்வுப் பணி நடத்தி வருகின்றனர். அப்போது சில ஹம்பேக் வகை திமிங்கலங்களைப் பார்த்த அவர்கள் அதனைப் படம் பிடித்தனர்.
அப்போது நீருக்குள் சென்ற திமிங்கலங்கள் உள்ளிருந்து மூச்சுக்காற்றை வெளியிட, அவை வட்டம் வட்டமாக காற்றுக் குமிழ்களாக வெளி வந்தன.
இதனால் குழப்பமடையும் ஏனைய மீன்களை ஹம்பேக் திமிங்கலங்கள் வேட்டையாடுவது தெரியவந்தது.