லெபனானில் நடைபெற்ற வண்ணங்களுக்கான திருவிழாவில் அரசியல் கட்சிகளை கண்டிக்கும் விதமாக மக்கள் வெள்ளை நிற பொடியை மட்டும் தூவி கொண்டாடினர்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மின்சார தட்டுப்பாடால் லெபனான் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். வழக்கமாக வண்ணத் திருவிழாவில் பல்வேறு வண்ண பொடிகளை தூவி மகிழும் லெபனான் மக்கள் இம்முறை வெள்ளை நிற பொடியை மட்டும் தூவி மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு வண்ணமும் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியை குறிப்பதால் அவற்றை தவிர்த்து மனதுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக வெள்ளை நிற பொடியை மட்டும் பயன்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.