ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டெல்டா வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நூறு நாட்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
இதனால் ஏராளமான இளைஞர்கள் அதிகாலையிலேயே ஜிம்-மிற்கு சென்று உற்சாகமாக உடற்பயிற்சி மேற்கொண்டனர். வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக மதுபான விடுதிகளும், சூப்பர் மார்கெட்களும் திறக்கப்பட்டன.
உணவகங்கள், மதுபான விடுதிகள், சூப்பர் மார்கெட்கள் என அனைத்து இடங்களிலும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.