வடகிழக்கு சீனாவின் ஹேய்லோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் உள்ளே சிக்கிக்கொண்ட நான்கு தொழிலாளர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
30 மணி நேர போராட்டத்துக்குப் பின் சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குவிதாஹி நகரின் லுஷான் நிலக்கரி சுரங்கத்தில் நில அதிர்வால் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய மேலும் 3 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.