இந்தியா உள்பட அனைத்து நாடுகளில் இருந்தும் முழுமையாக தடுப்பூசி போட்ட சுற்றுலா பயணிகள் வரலாம் என்று இலங்கை அறிவித்துள்ளது.
முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள், கொரோனா பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என சான்று வைத்திருப்பவர்கள், கொழும்புவுக்கு வந்தவுடன் பரிசோதனை செய்யவேண்டியது இல்லை. மேலும் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதும் இல்லை.
பயணத்துக்கு, குறைந்தது 14 நாட்களுக்கு முன்பு ஒருவர் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.