ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 100 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
குந்தூஸ் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் ஏராளாமானோர் தொழுகை நடத்தியபோது, திடீரென குண்டுவெடித்ததில் பலர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், இது தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு நிகழ்ந்துள்ள மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
மசூதி தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், ஆப்கானில் ஷியா முஸ்லீம்களை குறிவைத்து ஐஎஸ் இயக்கம் அடிக்கடி தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது.