எல் சால்வடார் நாட்டின் பிட் காயின் செயலியில் தொழில்நுட்ப கோளாறு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உலகில் பிட் காயின் நாணய பரிவர்த்தனையை முதன்முதலில் அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்திய மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரின் பிட் காயின் செயலியில் பண பரிவர்த்தனை பிரச்சனை, வாடிக்கையாளர் அடையாள திருட்டு உள்ளிட்டவற்றால் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிட் காயின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் தொழில்நுட்ப கோளாறுகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் Nayib Bukele தெரிவித்துள்ளார்.