துருக்கியின் மர்மரா கடலில் sea snot என்னப்படும் ஒருவகை கடல் பசை உருவாகி மாசடைந்துள்ளதால் மீன் பிடி தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் கடல் வெப்பம் அதிகரித்து வருவதால் கடற்பாசியிலிருந்து இயற்கையாக உருவாகும் இவை விஷத்தன்மை அற்றவையாக இருந்தாலும், நுண்ணுயிரிகளின் புகலிடமாக இருக்கின்றன.
இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேரும் கழிவு நீர் சரியாக சுத்திகரிக்கப்படாமல் கடலில் கலக்க விடுவது தொடர்ந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என இஸ்தால்புல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.