இந்தியாவில் இருந்து வரும் பயணிகளை பத்து நாள் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்வதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. கோவிஷீல்ட் உள்பட பிரிட்டன் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு இச்சலுகை அளிக்கப்படுகிறது.
இந்தியர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் போட்டிருந்தாலும் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்துவது கட்டாயம் என இங்கிலாந்து அரசு அறிவித்திருந்தது. இப்பிரச்சினையை பிரதமர் மோடி உள்ளிட்ட இந்திய தரப்பினர் பிரிட்டன் அரசுக்கு சுட்டிக் காட்டி தடையை விலக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
ஆனால் பிரிட்டன் அரசு இந்தியாவில் கோவிஷீல்ட் செலுத்தியவர்களை அனுமதிக்கும் போதும் தனிமைப்படுத்துதலைக் கட்டாயமாக்கியது. இதற்கு சான்றிதழ் தொடர்பான காரணங்கள் தெரிவிக்கப்பட்டனஇதையடுத்து பதிலடியாக இந்தியாவும் இங்கிலாந்து பயணிகள் இரண்டு தடுப்பூசிகளைப் போட்டிருந்தாலும் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்துவார்கள் என்று அறிவித்தது. .
இதையடுத்து இந்திய அதிகாரிகளுடன் பிரிட்டன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் கோவிஷீல்ட் போட்டுக் கொண்ட இந்தியர்கள் அனைவரையும் பத்து நாள் தனிமைப்படுத்தப் போவதில்லை என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
அக்டோபர் 11 முதல் இங்கிலாந்து வரும் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் இருந்து நேராக வெளியே செல்லலாம் என்று பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் தெரிவித்துள்ளார்.