பைசர் மற்றும் பயோஎன்டெக் இணைந்து தயாரித்த தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட சில மாதங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், பூஸ்டர் டோஸ் தேவை என்று நியூ இங்லேன்ட் ஜர்னல் ஆப் மெடிசின் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய சுகாதாரப் பணியாளர்கள் 5 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்ட 6 மாதங்களில் எதிர்ப்பு சக்தி தொடர்ந்து குறைகிறது என்றும் பெண்களை விட ஆண்களுக்கு குறைவான பாதுகாப்பே கிடைக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளைஞர்களை விட வயதானவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அளவு குறைந்திருப்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்ட்டுள்ளது.