பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் முடங்கிய ஒரே நாளில் டெலிகிராம் செயலியில் புதிதாக 7 கோடிப் பயனாளர்கள் சேர்ந்துள்ளனர்.
அக்டோபர் நான்காம் நாள் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் வலைத்தளங்கள் சுமார் ஆறு மணி நேரம் முடங்கின. அந்த ஒருநாளில் மட்டும், சேதி அனுப்பும் செயலியான டெலிகிராமில் புதிதாக 7 கோடிப் பயனாளர்கள் சேர்ந்துள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி பாவல் துரோவ் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் மிகப்பெரும் எண்ணிக்கையில் புதிய பயனர்கள் சேர்ந்தாலும் டெலிகிராம் தடையின்றித் தொடர்ந்து செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.