கொரோனா காரணமாக சர்வதேச விமான நிறுவனங்களுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பாஸ்டன் நகரில், சர்வதேச விமான நிறுவனங்களின் அமைப்பான சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய தலைமை இயக்குனர் வில்லி வால்ஷ், கொரோனா காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டுவரை சர்வதேச விமான போக்குவரத்து தொழிலுக்கு 15 லட்சத்து 7 ஆயிரத்து 500 கோடி இழப்பு ஏற்படும் என்றார்.
இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.