குறைந்த செலவில் பலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டம் 2024ம் ஆண்டு முதல் தொடங்கும் என வேர்ல்ட் வியூ என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பலூன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது.
ஒரு காப்சூலில் 8 பேரை ஏற்றிக் கொண்டு பூமியிலிருந்து ஒரு லட்சம் அடி அல்லது 18 மைல் உயரத்திற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளது.