அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் நியூபோர்ட் கடற்கரை அருகே ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மிதக்கும் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
கடற்கரை அருகே அமைந்துள்ள எண்ணெய் குழாயை கப்பலின் நங்கூரம் சேதப்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், இறந்த மீன்கள், பறவைகள் கரையொதுங்கியுள்ளன.
இதனால் தெற்கு கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் குழாயிலிருந்து சுமார் 5 லட்சத்து 72 ஆயிரம் லிட்டருக்கு அதிகமான எண்ணெய் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.