அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் கல்வித்துறை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது..
ஆகஸ்ட் மாதத்தில் கொண்டுவரப்பட்ட இந்த விதியில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு செப்டெம்பர் வரை சம்பளம் இல்லாமல் விடுப்பு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கல்வித்துறை வளாகம் முன் கூடிய நூற்றுக்கணக்கான ஊழியர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறி முழக்கமிட்டனர்.