இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் ஆகிய இருவரும் நோபல் பரிசுக்கு தேர்வானதாக, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், தேர்வுக்குழுவினர் அறிவித்தனர்.
வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் ஆகியவை நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம், அது அனுப்பும் சமிக்ஞைகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்ததற்காக இரு விஞ்ஞானிகள் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நரம்பியல் மண்டலத்தின் உணர்திறன் அமைப்பு செயல்பாடுகளையும் அவ்விஞ்ஞானிகள் துல்லியமாக கண்டுபிடித்துள்ளனர். இவர்களது கண்டுபிடிப்புகள், நாள்பட்ட வலிகள் தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு பெரிதும் பயன்படும் என நோபல் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.