பூமியோ கிசிடாவைப் புதிய பிரதமராக அங்கீகரித்து ஜப்பான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் பதவியில் இருந்து யோசிகிடே சுகா விலகியதையடுத்து ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி சார்பில் புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தாரோ கோனோவைத் தோற்கடித்து பூமியோ கிசிடா வெற்றிபெற்றார்.
இதையடுத்து ஜப்பான் நாடாளுமன்றத்தில் இன்று பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் அவரைப் பிரதமராக அங்கீகரித்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்துப் புதிய அமைச்சரவைப் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
சுகா அமைச்சரவையில் இருந்தவர்களில் பெரும்பாலோர் புதிய அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளனர். பத்துக்கு மேற்பட்ட புதுமுகங்களும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.