இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இரும்பு பாலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 1862ம் ஆண்டு டிபேர் ஆற்றின் குறுக்கே ரயில் பாதையுடன் கூடிய 425 அடி நீள இரும்பு பாலம் கட்டப்பட்டது.
போண்டே-டி-ஃபெரோ என்றழைக்கப்படும் இரும்பு பாலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரிந்த பாலத்தின் ஒரு பகுதி ஆற்றில் விழுந்தது. விபத்தில் யாரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.