அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக டுட்ரேட் அறிவித்திருந்தார்.
பிலிப்பைன்ஸில் ஒருவர் ஒரு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும் என்பதால் அவரது முடிவை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக எதிர்கட்சியினர் எச்சரித்தனர். இந்நிலையில், தனது பதவிக்காலம் நிறைவடைந்ததும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அதிபர் டுட்ரேட் அறிவித்துள்ளார்.
அதிபர் டுட்ரேட்-டின் ஆட்சியில் 6000 க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதால் சர்வதேச நீதிமன்றத்தில் அவர் மீது பல வழக்குகள் விசாரணையில் உள்ளன.