நெட்பிளிக்ஸ்-ல் வெளியாகி பிரபலமடைந்து வரும் ஸ்குவிட் கேம் என்ற தொடரில் இடம்பெரும் பொம்மையின் மாதிரியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள பிலிப்பைன்ஸில் மக்கள் கூடி வருகின்றனர்.
செப்டெம்பர் 17 ஆம் தேதி வெளியான இந்த தென் கொரிய தொடர், குழந்தைகளின் சாதாரண விளையாட்டுக்களை, கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாதவர்கள் விளையாடி, அதில் வெற்றி பெற்றவர்கள் பெருந்தொகையை பரிசாக பெரும் வகையிலும், தோற்பவர்கள் கொல்லப்படும் வகையிலும் கதைகளத்தை கொண்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்பட சர்வதேச அளவில் நெட்பிளிக்ஸ்-ன் டாப் 10 பட்டியலில் ஸ்குவிட் கேம் தொடர் இடம்பெற்றுள்ளது.