உலகின் மிகச் சிறிய மின்சாரக் கார் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வுலிங் நானோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கார், டாடா நானோ காரை விட சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தியான்ஜின் சர்வதேச கார் கண்காட்சியின் போது அறிமுகமான வுலிங் நானோ, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
இருவர் மட்டுமே பயணிக்க முடிந்த இந்தக் காரில் 6.6 கிலோவாட் ஏசி அடாப்டர் மூலம் நான்கரை மணி நேரத்தில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளமுடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 305 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.