ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் அடக்குமுறைக்கு பயந்து வெளியேறிய அந்நாட்டின் பெண்கள் கால்பந்து அணியைச் சேர்ந்த பலருக்கு போர்ச்சுகல் அரசு புகலிடம் கொடுத்துள்ளது.
ஆஃப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு சிறந்த கால்பந்து வீராங்கனை ஆக வேண்டும் என்ற அவர்களது கனவு தவிடுபொடியாகும் என்று எண்ணிய வீராங்கனைகள், அவர்களது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு காபுல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு போர்ச்சுகல் சென்றனர்.
இப்போது பாதுகாப்பாக உணர்வதாகவும் கனவு மெய்ப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.