ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாகிஸ்தான் எல்லையருகே திரண்டிருக்கும் நிலையில் அவர்களை தாலிபன்கள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்புகின்றனர்.
வேலையோ, வருமானமோ இல்லாத நிலையில், பாதுகாப்பும் கேள்விக்குறியாக இருப்பதால் ஏராளமானோர் சொந்த ஊர்களை விட்டு வெளியே செல்ல முயற்சித்து வருகின்றனர்.
அனைத்து பாதைகளையும் அடைத்துவிட்டதால், நோய்க்கு சிகிச்சை பெறச் செல்லும் சில முதியோர், தினக்கூலிகள், வியாபாரிகள் தவிர மற்ற யாரையும் தாலிபன்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை.