நேற்று அறிமுகப்படுத்தப்படுவதாக இருந்த ரோல்ஸ் ராய்ஸ் மின்சார கார் வரும் 2023 ஆம் ஆண்டு இறுதியில் தான் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதன் பேட்டரி திறன், சார்ஜ் செய்தால் எத்தனை தூரம் ஓடும், எலக்ட்ரிக் மோட்டாரின் சைஸ் உள்ளிட்ட தகவல்களெ எதையும் ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்பாளரான BMW வெளியிடவில்லை.
அதே நேரம் Spectre மின்சார கார் விற்பனைக்கு வரும் போது ரோல்ஸ் ராய்ஸ் கார்களிலேயே மோஸ்ட் சைலன்ட் காராக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல்-டீசல் கார்களுக்கு விடை கொடுத்து விட்டு முழுவதும் மின்சார கார்களை மட்டுமே தயாரிக்க உள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் தலைமை செயல் அதிகாரி டார்ஸ்டன் முல்லர் ஒட்வாஸ் தெரிவித்துள்ளார்.