மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள் தான் என்று முதன்முறையாக அந்நாட்டு ஆளும் கட்சியான Tehreek-e-Insaf ஒப்புக் கொண்டுள்ளது.
இந்திய தொலைக்காட்சி செய்தியாளருக்கு அளித்த பேட்டியின் போது, கசாப் உள்ளிட்ட 10 தீவிரவாதிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அப்துல் சமத் யாகூப் ஏற்றுக் கொண்டார்.
ஆனால் அவர்கள் பாகிஸ்தான் அரசால் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தீவிரவாதத் தாக்குதல் தொடுப்பதில் தவறு இல்லை என்றும் அவர் அதிர்ச்சிகரமான ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.