ஆப்பிரிக்க நாடான துனீசியாவின் வரலாற்றில் முதன் முதலாக பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார தேக்கம், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக முந்தைய அரசை துனீசிய அதிபர் கயீஸ் சயீத் பதவி நீக்கம் செய்தார்.
பின்னர் 2011ல் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த நஜ்லா பூடன் ரோம்தான் என்பவரை பிரதமராக நியமித்தார். இது துனிசியா மற்றும் துனிசிய பெண்களுக்கு ஒரு மரியாதை என்று அதிபர் தெரிவித்துள்ளார்.