அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விதி அமலில் உள்ள நிலையில், மருத்துவம் மற்றும் மத ரீதியான காரணங்களுக்காக விலக்கு பெற்ற சில ஊழியர்கள் இன்னும் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.
அவ்வாறு உள்ள சுமார் 600 ஊழியர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.