லண்டனில் நடந்த ஜேம்ஸ் பாண்ட் படமான 'நோ டைம் டு டை' படத்தின் சிறப்பு காட்சியில் பிரிட்டனின் அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.
லண்டனில் நடைபெற்ற சிறப்பு காட்சியில், பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமிலா, இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட் ஆகிய அரச குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர்
நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் டேனியல் கிரேக், இதர நடிகர்கள் ரமி மலெக், லஷனா லின்ச் உள்ளிட்டவர்களும், ஹாலிவுட் நட்சத்திரங்களும் கலந்துக் கொண்டனர். 200 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், இந்தியாவில் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.