புதிய ஆட்டோமேட்டிக் ரெபோ, ஒரு ஸ்மார்ட் தெர்மோஸ்டாட், வீட்டில் இல்லாத போது வயதானவர்களை கவனித்துக் கொள்வதற்கான ஸ்மார்ட் சேவை உள்ளிட்ட பல புதிய அம்சங்களை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இவற்றில் அமேசான் ஆஸ்ட்ரோ என்ற ஆட்டோமேட்டிக் ரொபாட், கூகுளின் அலெக்சாவுடன் இணைக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவுடன் வீடு முழுதும் சுற்றி வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தானாக நகருவதுடன், பார்க்கவும், கேட்கவும், நமது கட்டளைகளை உணர்ந்து அதற்கேற்ப செயல்படவும் இந்த ரெபோவால் முடியும்.. விலை சுமார் ஆயிரம் டாலர்.
வீட்டின் வெப்பநிலையை தானாக உணர்ந்து அதை சரி செய்யும் திறன் வாய்ந்த ஸ்மார்ட் தெர்மோஸ்டாட், குடும்ப உறுப்பினர்களின் sticky notes களை ஒரே திரையில் காண்பிப்பது, செய்தி, சினிமா, இதர ஸ்மார்ட் உபகரணங்களை ஒன்றிணைக்கும் வசதி உள்ளிட்டவற்றுக்காக 15 இஞ்சு தொடுதிரையுடன்கூடிய அமேசான் எக்கோ ஷோ, குழந்தைகளுக்காக ஹே டிஸ்னி என்ற லேட்டஸ்ட் விளையாட்டு சாதனம், பெற்றோருடன் உரையாடுவதற்காக அமேசான் குளோ, உடல் நலத்தை கண்காணிக்கும் அமேசான் ஹலோ வியூ,வீட்டைச் சுற்றிப் பறந்து கண்காணித்து காட்சிகளை வழங்கும் Ring Always Home Cam என்ற பாதுகாப்பு கேமரா ஆகியவற்றையும் அமேசான் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.