இங்கிலாந்து அரசு, பணியாளர்களுக்கான விசா விதிகளைத் தளர்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.
சரக்கு லாரி ஓட்டுனர்களுக்கு அங்கு கடும் தட்டுப்பாடு நீடிப்பதால் உணவுப் பொருட்களையும் இதரப் பொருட்களையும் விநியோகம் செய்வதில் நெருக்குதல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கிறிஸ்துமஸ் வரை பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்காக 5 ஆயிரம் டிரக் ஓட்டுனர்களுக்கு தற்காலிக விசா வழங்க பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் ஒரு லட்சம் ஓட்டுனர்கள் வரை தேவைப்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கோவிட் மற்றும் பிரெக்சிட் பாதிப்பு காரணமாக ஓராண்டாக டிரைவர் பயிற்சி அளிக்க முடியாமல் போனதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டத் தட்டுப்பாட்டை தொடர்ந்து ஏராளமான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன.
பொருள் விநியோகம் சரிவர இருப்பதில்லை என்பதால் மக்களிடையே கூடுதலாகப் பொருள் வாங்கிக்குவிக்கும் பதற்ற நிலை காணப்படுகிறது.