பிரான்சிடம் இருந்து நீர் மூழ்கிக் கப்பல்கள் வாங்கும் திட்டத்தை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்ததால் பிரான்சின் கப்பல் கட்டும் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டரை ரத்து செய்தவதாக ஆஸ்திரேலியா அறிவித்ததால் பிரான்சின் கப்பல் கட்டும் நகரமான செர்போர்கின் கப்பல் கட்டும் தொழிலை நம்பி வாழ்ந்து வருபவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நேவல் குரூப் என்ற கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு ஆட்ரர் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அங்கு வேலை செய்யும் சுமார் 3 ஆயிரத்து 400 தொழிலாளர்கள் மற்றும் இதர மறைமுக தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.