பொலிவியாவில் அரிதினும் அரிதாக தென்படும் இளஞ்சிவப்பு ஆற்று டால்பின்களை பற்றி விஞ்ஞானிகளுடன் சேர்ந்து மீனவர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.
அமேசானின் இச்சிலொ நதியில் தென்பட்ட சில ஆற்று டால்பின்களை பிடித்த ஆராய்ச்சியாளர்கள், அவற்றின் உடம்பில் செயற்கைகோள் கருவிகளை பொருத்தி மீண்டும் ஆற்றில் விட்டனர்.
இதன்மூலம் அந்த டால்பின்கள் செல்லும் இடங்கள், சாப்பிடும் உணவுகள், அவை சந்திக்கும் அச்சுறுத்தல் ஆகியவை செல்ஃபோன் செயலி மூலம் மீனவர்களால் கண்காணிக்கப்படும்.