அமெரிக்காவில் குடியேரும் நோக்கில் அந்நாட்டு எல்லைக்கு வரும் நூற்றுக்கணக்கான ஹைத்தி நாட்டவர்களை அமெரிக்க அரசு விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வருகிறது.
கரீபிய நாடான ஹைத்தியில், வறுமை மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதையடுத்து, வேலை மற்றும் பாதுகாப்பை தேடி அந்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மெக்ஸிகோ-அமெரிக்க எல்லையான டெக்சாஸில் குவிந்து வருகின்றனர்.
அவர்களை அமெரிக்க அரசு விமானம் மூலம் திருப்பி அனுப்பி வரும் நிலையில், அவ்வாறு ஹைத்திக்கு திரும்பும் பலர், சமூக விரோத கும்பல்களுடன் இணைவதாக கூறப்படுகிறது.