ஸ்பெயினின் லா பால்மா தீவில் சில நாட்களுக்கு முன் வெடிக்கத் தொடங்கிய எரிமலை உக்கிரமடைந்து வருவதால் தீயணைப்பு பணிகள் கைவிடப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிறன்று கும்ரே வியாஜா எரிமலை வெடித்து சிதறி தொடர்ந்து நெருப்பு குழம்பினை வெளியிட்டு வருகிறது.
மலை உச்சியில் புதிதாக ஏற்பட்டுள்ள துளையிலிருந்து மேலும் தீப்பிழம்புகள் வெளியேறி வருவதால் மலையடிவாரத்தில் உள்ள மேலும் 3 நகரங்களில் வாழும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். எரிமலையிலிருந்து வானை முட்டும் அளவுக்கு புகை மற்றும் சாம்பல் வெளியேறி வருவதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.