ஆப்கானிஸ்தானில் குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், நிலக்கரி மற்றும் விறகுக்கு கூட செலவு செய்ய முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒரு நாள் முழுவதும் வேலை செய்தால் 50 ஆப்கானி அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 42 ரூபாய் கிடைப்பதாக கூறும் ஆஃப்கான் வாசிகள் , குளிரிலிருந்து காத்துக்கொள்ள தேவைப்படும் விறகுக்கு கிலோவுக்கு சுமார் 67 ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தாலிபான்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதல் அத்தியாவசிய பொருட்களான அரிசி, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது.