பிரேசிலில் நிலவும் உணவு பாதுகாப்பின்மை மற்றும் பணவீக்க உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்குச்சந்தை வளாகத்திற்குள் புகுந்து போராட்டம் நடத்தினர்.
MTST என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள், அதிகரித்து வரும் பணவீக்கத்தால் உணவு வாங்குவதில் உள்ள கஷ்டத்தை உணர்த்தும் வகையில் ஸாவோ பாலோவில் உள்ள பங்கு சந்தை வளாகத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர் .
பசி என்று எழுதப்பட்ட கொடி, காலி பாத்திரங்கள், பதாகைகள் ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தனர். பிரேசிலில் 12 மாதங்களில் பணவீக்க விகிதம் 10 சதவீதத்தை தொட்டு உள்ளதாக கூறப்படுகிறது.